Tuesday, April 3, 2007
ஆவணக் களவும் ஆணவக் கனவும்
பாரிசில் உயிர்நிழல் ஆசிரியர் லக்சுமியின் வீடு உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று (19.3.07) பிற்பகல் 3 மணிக்கும் 7 மணிக்கும் இடையில் யாரும் வீட்டில் இல்லாத நேரம் இது நடத்திமுடிக்கப்பட்டுள்ளது. அரசியல் கலை இலக்கிய ஈடுபாடு கொண்டு புகலிடத்தில் தொடர்ச்சியாக செயற்பட்ட கலைச்செல்வன் லக்சுமி ஆகியோரால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்களே களவுபோயிருக்கின்றன. சேகரித்து வைக்கப்பட்டிருந்தவற்றுள் -களவுக்குத் தேவைப்படாத- இரண்டு „ஒளிவீச்சு“ ஒளிநாடாக்களும் மேசையின்மீது பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. கலைச்செல்வனின் மறைவுக்குப் பின்னர் மீண்டும் உயிர்நிழல் சஞ்சிகையை தனியாக நின்று லக்சுமி கொண்டுவருகிறார். உயிர்நிழல் ஒரு அரசியல் விமர்சன ஏடுமல்ல.
1989 இலிருந்து தொடர்ச்சியாக புகலிடத்தில் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இலக்கியச் சந்திப்பு சம்பந்தப்பட்ட ஒலி ஒளி நாடாக்கள் டிவிடிக்கள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் களவாடப் பட்டிருக்கின்றன. இச் சந்திப்புகளில் ஜனநாயக மறுப்புகள் பற்றிய பேச்சுக்களும் அரசியல் விமர்சனங்களும் இடம்பெறுவதுண்டு. இந் நிகழ்வுகளின் பதிப்பை ஆவணப்படுத்தி பாதுகாப்பது ஒரு சமூகநலத்தின் அக்கறைக்குட்டபட்ட தேவையாகும். இவைகளை களவாடுவது, அழிக்கமுயல்வது மனிதஉரிமையை, அதன் குரல்வளையை நசுக்குவதற்கு ஒப்பான செயலாகும். இவ்வாறு நிகழ்ந்ததையும் பார்த்துக்கொண்டிருப்பது-மௌனித்திருப்பது மனித உரிமைக்கு குரல் கொடுப்பதாய் மேடைகளில் மட்டும் பிதற்றுவதற்கு ஒப்பானது.
மனிதனின் பிறப்புரிமையான சுதந்திரக் குரல்களுக்குள்ளேயே எதையோ தோண்டித் துளாவுமளவுக்கு அதுவும் புகலிடம்வரை பாதாளப்பட்டுப் போயிருக்கிறது "ஜனநாயகம்“ என்பதை நிரூபிக்கும் இன்னொரு சம்பவம்தான் இந்த ஆவணக் களவு. விடுதலை பற்றிய கனவுகளின் சிதைவுகள் தொடர்ந்தும் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதையன்றி வேறு எதைச் சாதித்துவிட முடியும் இந்த ஜனநாயக மறுப்புகளால்!
0
நன்றி: ஊடறு
மேலும் பிற தளங்களில் இருந்து வாசிக்க:
தமிழரங்கம்
சத்தியக்கடதாசி
(((((((()))))))))))))))
தேனீ
asian tribune
Subscribe to:
Posts (Atom)